Advertisement

சாஹோ - டுவிட்டர், இணையதள விமர்சகர்கள் மிரட்டல் ?

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிக்க பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'சாஹோ'. இப்படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை அமெரிக்காவிலும் பெரிய அளவில் திரையிட திட்டமிட்டுள்ளார்கள். அங்கு ஒரு நாள் முன்னதாகவே படத்தின் பிரிமீயர் காட்சிகளை நடத்த உள்ளார்களாம்.
ஆனால், அங்குள்ள சில டுவிட்டர் விமர்சகர்கள் மற்றும் சில இணையதளங்கள் புதிதாக ஒரு மிரட்டலை விடுத்துள்ளார்களாம். அவர்களுக்கு எந்த விளம்பரத்தையும் தர வெளியீட்டு நிறுவனம் தயாராக இல்லையாம். அதனால், படத்தைப் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிடுவோம் என்று கூறி வருகிறார்களாம். இம்மாதிரியான மிரட்டல் காரணமாக படத் தயாரிப்பு நிறுவனம் அச்சமடைந்துள்ளதாம்.
ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்காவில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தால் அது படத்தைப் பாதிக்கும் என பயப்படுகிறார்கள். இப்படியான மிரட்டலை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசித்து வருகிறார்களாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement