Advertisement

அரசியலுக்கு வருகிறாரா பிரபாஸ்?

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் வருகிற 30-ந்தேதி திரைக்கு வருகிறது. இதனால் அவர் பல நகரங்களுக்கும் சென்று பிரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அவரிடத்தில் அனுஷ்காவுடனான திருமணம் குறித்து மீண்டும் மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, ஒரு சில மாதங்களில் இந்த திருமண வதந்தி காணாமல் போய்விடும் என்று நினைத்தேன்.ஆனால், இது நானோ அல்லது அனுஷ்காவோ திருமணம் செய்து கொள்ளாதது வரை ஓயாது போல் தெரிகிறது. அதனால் அடுத்தமுறை அனுஷ்காவை சந்திக்கும்போது யாரையாது சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்வேன் என்று பதிலளித்திருந்தார் பிரபாஸ்.
அதையடுத்து இப்போது அவரிடத்தில் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை உள்ளதா? என்று மீடியாக்கள் கேட்டுள்ளன. அதற்கு பிரபாஸ் பதிலளிக்கையில், எனது மாமா கிருஷ்ணம் ராஜூவிற்காக நான் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். ஆனால் அப்போதுதான் எனக்கு அரசியல் செட்டாகாது என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று மறுத்துள்ளார்.
அதோடு, நான் முழுநேர நடிகனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். நான் ரசிகர்களை மதிக்கிறேன். சினிமாவுக்காகவே வாழப்போகிறேன். சினிமா மூலம் மக்களை தொடர்ந்து மகிழ்விப்பதிலேயே எனது மகிழ்ச்சியும் இருப்பதாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரபாஸ்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement