Advertisement

அக்டோபர் 4ல் வருகிறார் அசுரன்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் அசுரன் இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன்இயக்கியுள்ளார் . இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் தனுஷுடன் இணைத்து கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார் . இவர்களுடன் பசுபதி , பாலாஜிசக்திவேல் , சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் நரேன் , பவன் ,அம்மு அபிராமி , கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர் . ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இது விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கதை. தனுஷ் மூன்று கெட்அப்களில் நடித்துள்ளார். இது ஒரு குறுகிய கால தயாரிப்பாகும். தற்போது படம் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்பாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement