Advertisement

அஜித்திற்கு ரைபிள் கிளப் சான்று

சினிமாவை கடந்து பைக், கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட அஜித், பல ஆண்டுகளாக ஆளில்லா சிறிய ரக விமானங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார். அதையடுத்து போட்டோகிராபியில் ஆர்வமாக இருந்தவர் சமீபகாலமாக துப்பாக்கி சுடும் போட்டியில் அதிகப்படியான ஆர்வத்தை காண்பித்து வருகிறார்.

அந்தவகையில், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார் அஜித். அப்போது அடுத்த சுற்றுக்கு அவர் தகுதியும் பெற்றார். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழ் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதையடுத்து வருகிற டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில், போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்து கொள்கிறார் அஜித்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement