Advertisement

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சைரா டீசர்

தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ் திரைப்படங்களைப் பொறுத்த வரையில், வரலாற்று கதையை வைத்து படங்கள் எடுக்கும்போது அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனாலும், அப்படிப்பட்ட படங்களை பெரிய அளவில் எடுக்க யாரும் முன் வருவதில்லை. காரணம், பட்ஜெட் தான்.

இருந்தாலும், பிற மொழிகளில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸாகின்றன. அந்த வகையில் தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படம் தற்போது மிகப் பிரம்மாண்டமாக, அதிக அளவிலான பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில், நடிகர் சிரஞ்சீவி பிரதான கேரக்டரில் நடித்திருக்கிறார். அமிதாப்பச்சன், நயன்தாரா, கஜபதி பாபு, தமன்னா, நஹாரிகா, விஜய் சேதுபதி, கிச்சா சுதீப் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தை ராம் சரண் தயாரிக்க, சுரேந்தர் ரெட்டி இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்துக்கான டீசர் வெளியாகி உள்ளது. அந்த டீசர் 1.42 நிமிடம் மட்டுமே ஓடுகிறது. டீசர் முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடக்கும் போர்க்காட்சிகள் இடம் பெற்றுள்ளனர். டீசரின் அநேக இடங்களிலும் சிரஞ்சீவியே ஆக்ரமித்திருக்கிறார். இந்த வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

நடிகர் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நடிகை நயன் தாரா, தமன்னா உள்ளிட்டோர், டீசரில் ஆங்காங்கே தென்படுகின்றனர். டீசர் வெளியான சில மணிநேரங்களில் டிரெண்ட்டிங்கில் இடம் பெற்றது.

#SyeRaa tamil teaser.https://t.co/ltaBXZ52t4#SyeRaaTeaser— VijaySethupathi (@VijaySethuOffl) August 20, 2019

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement