Advertisement

ராஷ்மிகா மீது வருத்தத்தில் படக்குழு

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது , ரெமோ புகழ் பாக்யராஜ் கண்ணன் டைரக்சனில் கார்த்தியுடன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சுல்தான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பொதுவாக பிரபல ஹீரோக்களின் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போன்றவற்றை விசேஷ நாட்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். சுல்தான் படத்திற்கும் அப்படிதான் படக்குழுவினர் திட்டமிட்டு வைத்திருந்தனர். ஆனால் நாயகி ராஷ்மிகா மந்தனா, போகிற போக்கில் சாதாரணமாக தனது இன்ஸ்டாகிராமில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருவதாக கூறியதன் மூலம் இந்த டைட்டில் ரசிகர்களிடம் வெளிப்பட்டு விட்டது.

அதனால் ராஷ்மிகா மீது கார்த்தி உள்ளிட்ட படக்குழு வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement