Advertisement

12 ஆண்டுகளுக்கு பின் காதலியை மணந்த டுவெய்ன் ஜான்சன்

டபிள்யூ டபிள்யூ எப் என்கிற மல்யுத்த போட்டி மூலமாக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தான் டுவெய்ன் ஜான்சன் எனும் 'ராக்'. பின்னாளில் ஹாலிவுட் நடிகராக மாறிய இவர் திரைப்படங்களிலும் தனது அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் கடந்த 2006 தி கேம் பிளான் என்கிற படத்தில் நடித்தபோது உடன் நடித்த லாரன் ஹாசியன் என்கிற நடிகையுடன் காதல் ஏற்பட்டு, கடந்த 2007 முதல் அவருடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார் டுவெய்ன் ஜான்சன்.

இந்த டேட்டிங் வாழ்க்கையின் அடையாளமாக இவர்கள் இருவருக்கும் ஜாஸ்மின், டயானா என்கிற இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் 12 ஆண்டுகள் டேட்டிங் முடித்த டுவெய்ன் ஜான்சன், நேற்று முன்தினம் லாரன் ஹாசியனை தான் திருமணம் செய்து கொண்டுவிட்டதாக திருமண புகைப்படத்துடன் தனது ரசிகர்களுக்கு சோசியல் மீடியாவில் செய்தியை அறிவித்துள்ளார். இவர்களது திருமணம் ஹவாயில் நடைபெற்றுள்ளது

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • sivu - ,

    ஏதோ பனிரெண்டு வருடம் காதல் மட்டுமே செய்துவிட்டு பின்னர் கல்யாணம் செய்து கொண்டாரோ என்று தவறாக நினைத்து விட்டேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement