Advertisement

கீர்த்தி சுரேஷின் நீண்டநாள் வருத்தம்

மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து, தனது நடிப்பு திறமையை நிரூபித்தவர் கீர்த்தி சுரேஷ். அதற்கு அடையாளமாக சமீபத்தில் மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மலையாள சினிமா பக்கம் அவர் கடந்த சில வருடங்களாக ஏன் பார்வையைத் திருப்பவில்லை என்கிற கேள்வி பலருக்கும் உள்ளது.

இது பற்றி சமீபத்தில் பேசிய கீர்த்தி சுரேஷ், “நான் அறிமுகமான காலகட்டத்தில் நடித்த 'ரிங் மாஸ்டர்' என்கிற படத்தில் கிட்டத்தட்ட படம் முழுவதும் கண் பார்வை தெரியாத பெண்ணாக நடித்திருந்தேன். ஆனால் அறிமுக நாயகி என்கிற வகையில் அந்த படத்தில் அந்த கேரக்டரில் நடிப்பதற்காக நான் மிகவும் சிரமப்பட்டேன்.. அந்த சமயத்திலேயே சவாலான கதாபாத்திரத்தில் நடித்த எனக்கு, அதன் பிறகு மலையாளத்தில் இருந்து அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் எதுவும் தேடி வரவில்லை. சொல்லப்போனால் தமிழ், தெலுங்கில் தான் எனது நடிப்புத் திறமையை நிரூபிக்கும் விதமான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் மலையாளத்தில் அப்படி கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் இவ்வளவு நாளாக இருந்து வந்தது. இப்போதுதான் எனது திறமையை நிரூபிக்கும் விதமாக ஒரு சில கதாபாத்திரங்கள் மலையாளத்திலிருந்து தேடி வருகின்றன. இனி தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பேன்” என்று கூறியுள்ளார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement