Advertisement

மஞ்சு வாரியரை காப்பாற்றுங்கள்: திலீப் வேண்டுகோள்

கேரளா, கர்நாடகா மட்டுமல்ல வட மாநிலங்களிலும் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடுமையான மழையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. தேசியவிருது பெற்ற சணல்குமார் சசிதரன் என்பவர் தான் இயக்கி வரும் புதிய படத்திற்காக அங்கே படக்குழுவினருடன் முகாமிட்டுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மஞ்சு வாரியர் அவர்களுடன் தான் இருக்கிறார். இவர்கள் அனைவரும் படப்பிடிப்பிற்காக தங்கியிருந்த பகுதி தற்போது வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு தனித்தீவு போல மாறியுள்ளதாம்.

இந்த தகவலை மஞ்சுவாரியர் கேரளாவில் உள்ள தனது தம்பியிடம் போன் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து இந்த விஷயம் அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்று, அரசு மூலமாக இமாச்சல பிரதேச முதல்வருக்கு மஞ்சுவாரியர் உள்ளிட்ட படக்குழுவினரை காப்பாற்றும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..

இந்த தகவலை கேள்விப்பட்ட நடிகர் திலீப், எர்ணாகுளம் எம்பியான ஹிபி ஈடன் மூலமாக மஞ்சுவாரியர் மற்றும் படக்குழுவினர் காப்பாற்றுமாறு தானும் வேண்டுகோள் வைத்துள்ளார். அவரும் இமாச்சல எம்.பியான அனுராக் தாக்கூரிடம் கூறி ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் திலீப்பின் முன்னால் மனிவி தான் நடிகை மஞ்சுவாரியர். இருந்தாலும் கருத்து வேறுபாடு தோன்றியதில் இருந்து தற்போது வரை இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் குறை சொல்லியது இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ

    மஞ்சு வாரியார் ஒரு மிக சிறந்த நடிகை..ஒரு காலத்தில் இவர் மலையாள திரை உலகில் கொடிக்கெட்டி பிறந்தவர்..அப்போது, திலிப் அவரை கல்யாணம் செய்தார்.. மஞ்சு வாரியாரின் கணவர் என்பதாலேயே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது..சில ஆண்டுகளுக்கு பின் திலிப், இன்னோரு இளம் நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டது..திலிப், மஞ்சு வாரியரை நடுஆதில்விட்டு விட்டு, அந்த இளம் நடிகையுடன் போய்விட்டார்..இப்ப ஏதோ யோகியர்போல் இந்த நாடகம்..

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இதுபோல் பிரியாமணி ஆபத்தில் சிக்கி இருந்தாலும் திலீப் வேண்டுகோள் விடுத்திருப்பாரா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement