Advertisement

சேரன், கஸ்தூரியைத் துரத்தத் துடிக்கும் ஐவர் அணி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா நுழைந்த பின் கடும் சண்டைகள் உருவாகின. ஆண்கள் அணி என்றும், பெண்கள் அணி என்றும் இரு பிரிவாகப் பிரிந்து மோதிக் கொண்டார்கள்.

ஆண்கள் அணி பக்கம் லாஸ்லியாவும், பெண்கள் அணி பக்கம் சேரனும் சேர்ந்து கொண்டார்கள். ஆண்கள் அணியில் லாஸ்லியாவுடன் சேர்த்து ஐவர் கூட்டணியாக, அடிக்கடி பாத்ரூம் அருகிலேயே அமர்ந்து திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள். அவர்களை அவெஞ்சர்ஸ் அணி என்று சிலர் அழைக்க, சிலரோ கக்கூஸ் கேங் என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள்.

நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்தார்கள். அதில் ஐவர் அணியைச் சேர்ந்த கவின், லாஸ்லியா, முகென், சாண்டி, தர்ஷன் ஆகியோர் ஒன்றாகப் பேசி வைத்துக் கொண்டு சேரன் மற்றும் கஸ்தூரியை நாமினேட் செய்தார்கள்.

ஆனால், பின்னர் லாஸ்லியாவிடம் நீ சேரனை நாமினேட் செய்ய மாட்டேன் என்று சொன்னாயே என்று கவின் கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. மற்றவர்களுடன் இணைந்து நாமும் சேரனை நாமினேட் செய்வோம் என்று லாஸ்லியா செய்துள்ளார். அதோடு தான் குழப்பத்தில் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

தன்னை, லாஸ்லியா நாமினேட் செய்ய மாட்டார் என்று கஸ்தூரியிடம் சொல்லிக் கொண்டிருந்த சேரன், தன் பெயர் நாமினேஷனில் வந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியடைந்து, தன்னை யார், யாரெல்லாம் நாமினேட் செய்திருப்பார்கள் என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்தார்.

இந்த வார நாமினேஷனில் சேரன், கஸ்தூரி, சாண்டி, தர்ஷன் ஆகிய நால்வர் உள்ளார்கள். இவர்களில் யார் காப்பாற்றப்பப் போகிறார்கள், யார் வெளியேறப் போகிறார்கள் என்பதற்கு ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bharatha Nesan - Chennai,இந்தியா

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நான் 3 பெண்களிடம் குடும்பம் நடத்தினேன், நீங்கள் எல்லோரும் என்னைப்போல் இருமடங்காக 6 பெண்களுடன்/ஆண்களுடன் குடும்பம் நடத்துங்கள் என பரப்புகிறாரோ? அனைவருக்கும் இந்த தகவலை கொண்டுசேருங்கள் அன்பான நண்பர்களே. நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement