Advertisement

கதிருடன் இணையும் தெலுங்கு நடிகை

Share

தெலுங்கில் சிற்சில கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ரகசியா. இவர் தற்போது, நடிகர் கதிர் நடிக்கும் சர்பத் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார். தெலுங்கு நடிகையான இவரது முழுப் பெயர் ரகசியா கொரக். அவர் நடித்த தெலுங்கு படங்களில், 'ராஜா வரு ராணி கரு' என்ற திரைப்படம் அவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கடந்த ஆண்டு பெரும் கவனம் பெற்ற கதிருடன் இணைந்து அவர் கதாநாயகியாக நடிக்க இருப்பது தனக்கு பெருமை என, ரகசியா கொரக் கூறியிருக்கிறார். நடிகர் கதிர், தற்போது விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

சர்பத் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியான கையோடு, படத்தின் படபிடிப்பு துவங்கி விட்டது. திண்டுக்கல்லை மையமாக வைத்து, படத்தின் படபிடிப்பை தொடர்கின்றனர். முன்னதாக சென்னையிலும், படபிடிப்பை நடத்தி இருக்கின்றனர். படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருவதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் கதிர், தன்னுடைய சகோதரர் திருமணத்துக்காக, சொந்த ஊருக்குச் செல்கிறார், அங்கே நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களின் தொகுப்புத்தான் சர்பத் படத்தின் பிரதான கதை. கதிரின் சகோதரராக விவேக் பிரசன்னா நடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபாகரன் இயக்குகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அஜிஷ் இசையமைக்கிறார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement