தெலுங்குத் திரையுலக சர்ச்சைகளின் நாயகன் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளை எழுப்பவில்லை என்றால் அவருக்குத் தூக்கமே வராது.
இன்றைய சர்ச்சையாக பைக்கில், ஹெல்மெட் இல்லாமல், டிரிபிள்ஸ் சென்று ஐ ஸ்மார்ட் சங்கர் படத்தைப் பார்த்திருக்கிறார். தான் அப்படிச் சென்றதன் புகைப்படம் மற்றும் வீடியோவையும் அவருடைய டுவிட்டரில் ஷேர் செய்திருக்கிறார்.
ராம்கோபால் வர்மாவிடம் உதவியாளராகப் பணியாற்றி தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்னாத், தயாரித்து இயக்கியுள்ள படம்தான் ஐ ஸ்மார்ட் சங்கர். இந்தப் படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி இரண்டு நாளில் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம்.
இந்தப் படத்தை இன்று பைக்கில் சென்று பார்த்ததைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள ராம்கோபால் வர்மா, “ஹெல்மெட் இல்லாமல், டிரிபிள்ஸ் சென்று ஐ ஸ்மார்ட் சங்கர் படம் பார்க்கச் செல்கிறோம். போலீஸ் எங்கே, அவர்கள் அனைவரும் படம் பார்க்க தியேட்டருக்குள் இருப்பார்கள் என நினைக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் போக்குவரத்து மீறல் குறித்து காவல் துறை அந்த வீடியோ, புகைப்படங்களை வைத்தே நடவடிக்கை எடுக்கலாம், எடுப்பார்களா ?.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!