அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மூன்றாவது படம் பிகில். கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். விஜய்யுடன் நயன்தாரா, இந்துஜா, கதிர், டேனியல்பாலாஜி உள்ளிட்ட பலர் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, ஏ.ஆர்.ரகுமான் பாடிய 'சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்கிடுமா...' என்ற பாடலை யாரோ திருட்டு தனமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், 'சிங்கப்பெண்ணே... ' பாடலை வரும் ஜூலை 23 ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!