Advertisement

சல்மானை நெகிழ வைத்த ரசிகை

இந்தியில் மவுசு குறையாத நடிகராக இருப்பவர் சல்மான் கான். அவர், சமீபத்தில் நடித்து வெளியான பாரத் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து நடிகரும்; இயக்குநருமான பிரபு தேவா இயக்கத்தில் உருவாகும் தபாங்க் 3 படத்தில், நடிகர் சல்மான் கான் நடித்து வருகிறார்.

நடிகர் சல்மான் கான், பிரபுதேவா, கன்னட நடிகர் சுதீப் ஆகியோர் இணைந்து நடனமாகிய வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகை ஒருவர், அவரது புகைப்படத்தை வரைந்து, அதை, வீடியோ பதிவாக்கி, சல்மான் கானுக்கு சம்ர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார். அந்த ரசிகை ஒரு மாற்றுத் திறனாளி. அவருக்கு கைகள் இருந்தும், அந்த கைகளைக் கொண்டு அவரால் எதுவும் செய்ய முடியாது. அதனால், தன்னுடைய கால் விரல்களாலேயே, சல்மான் கான் படத்தை வரைந்திருக்கிறார்.

இதையறிந்ததும், நெகிழ்ந்து போனார் சல்மான் கான். என்னுடைய அந்த ரசிகையை என்னால் மறக்க முடியாது. அவரின் செயல் என்னை நெகிழச் செய்கிறது. அவருக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என தெரியவில்லை. என்னுடைய வாழ்த்துக்களும், அன்பும், கடவுளின் ஆசியும் என்றென்றும் ரசிகைக்கு இருக்கும் என, சல்மான் கான் ட்விட்டரில், அந்த ரசிகையை வாழ்த்தி இருக்கிறார்.

இது பார்ப்போரையும் நெகிழ வைக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement