Advertisement

இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் : விமல்

களவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சற்குணம், விமல், ஓவியா கூட்டணியில் கடந்தவாரம் வெளிவந்த அதன் இரண்டாம் பாகம் களவாணி 2. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. விமல் பேசியதாவது...

இந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் நன்றி. கேரளாவில் வேறொரு படத்தில் இருந்ததால் என்னால் அந்த நேரத்தில் இங்கு வர முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. நல்ல கதை அமைந்தால் களவாணி 3ம் பாகத்திலும் நடிப்பேன். அது இன்னும் 10 ஆண்டு கழித்தும் நடக்கலாம் அல்லது அடுத்த ஆண்டே நடந்தாலும் ஆச்சரியமில்லை.

இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்பது போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்.. அந்த படம் படமாக்கப்பட்டதும், தலைப்பு வைக்கப்பட்டதும் எல்லாமே என் கையை மீறி நடந்த விஷயங்கள். அந்த படத்தில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன்.

நான் நடித்துள்ள கன்னிராசி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஜான் பீட்டர் - சிங்காரவேலன் கூட்டணியில் ஒரு படமும், ஸ்ரேயா ஜோடியாக சண்டைக்காரி படத்திலும் நடித்து வருகிறேன் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement