Advertisement

நானும், விமலும் இணைந்தால் ஹிட் : சற்குணம்

களவாணி 2 படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் இயக்குநர் சற்குணம் பேசியதாவது : “களவாணி போன்ற ஹிட் படத்தை கொடுத்து விட்டு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து மக்களை திருப்திப்படுத்துவது என்பது சவாலான விஷயம். களவாணி 2 படத்திற்கும் மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளார்கள். அந்த வகையில் மக்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் நன்றி.

எனக்கும் விமலுக்கும் ஒரு ராசி உண்டு. நாங்கள் இருவரும் இணைந்த களவாணி, வாகை சூடவா, விமலை வைத்து நான் தயாரித்த மஞ்சப்பை, இப்போது களவாணி 2 என 4 படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்து விட்டன. எங்கள் கூட்டணிக்கு தோல்வியே இல்லை.

களவாணி இரண்டாம் பாகம் எடுக்கிறோம் என்றதுமே உடனே ஒப்புக் கொண்ட ஓவியாவுக்கும் நன்றி. அதுபோல முதல் பாகத்தில் முக்கிய தூண்களாக உதவிய இளவரசு, சரண்யா பொன்வண்ணன் இருவருமே இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து விட்டார்கள். இளவரசு பல சமயங்களில் என்னை தன் தம்பியாக நினைத்து உற்சாகப்படுத்தி ஊக்கம் தந்தார். அதேபோல், இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அடித்துச் சொன்னார் சரண்யா பொன்வண்ணன். அது இன்று பலித்திருக்கிறது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement