Advertisement

திலீப் - அர்ஜுன் படத்திற்கு 5 சண்டை பயிற்சியாளர்கள்

தமிழில் நடிகர் அர்ஜுனின் இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாகவே துவங்கியுள்ளது.. அவர் நடித்து வரும் படங்களில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன், அவர் இடம்பெற்ற படங்கள் வெற்றியும் பெற்று வருகின்றன. மலையாள திரையுலகில் இருந்தும் வாய்ப்புகள் தேடிவர, தற்போது ஒரே நேரத்தில் மோகன்லால் மற்றும் திலீப் ஆகியோருடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அர்ஜூன்.

திலீப்புடன் இணைந்து நடித்து வரும் 'ஜாக் டேனியல்' என்கிற படத்தில் திலீப்புக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அர்ஜூன். இதில் ஜாக் என்கிற கொள்ளைக்காரனாக திலீப்பும் டேனியல் என்கிற சிபிஐ அதிகாரியாக அர்ஜுனும் நடித்து வருகின்றனர்.

சனல்புரம் ஜெயசூர்யா என்கிற இயக்குனர் இயக்கிவரும் இந்தப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு பிரதான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காகவே பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன், சுப்ரீம் சுந்தர், மாபியா சசி உள்ளிட்ட ஐந்து சண்டைப் பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.. தற்போது இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement