Advertisement

10ம் ஆண்டில் மூவரணி

கடந்த ஐந்து ஆண்டுகளில் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலியின் வளர்ச்சி அபரிமிதமானது. ஆனால் இவரது இந்த வளர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டது அவரது நண்பரும், இயக்குனருமான வினீத் சீனிவாசன் தான். ஆம் 2010ல் நிவின்பாலி ஹீரோவாக அறிமுகமான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்கிற படத்தை இயக்கி நிவின்பாலியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியதோடு, தானும் அந்தப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

அதுமட்டுமல்ல இன்று மலையாள சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருக்கும் அஜு வர்கீஸும், இதே படத்தில் அறிமுகம் ஆனவர் தான்.. அதன்பின் இவர்கள் மூவரும் பல படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்கள்.. அந்தவகையில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இவர்கள் மூவரும் ஒற்றுமையாக நட்புடன் இருப்பதுடன், தற்போதும் தங்களது ஏரியாவில் தனித்தனியாக 'கிங்' ஆக இருக்கின்றனர். தற்போது நிவின்பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தை இந்த அஜு வர்கீஸ் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement