Advertisement

பாலிவுட்டில் பிஸியாகும் பிரியா வாரியர்

ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பிரியா வாரியர் கொடுத்த புருவ அசைவு, அவரை இந்தியா முழுக்க பிரபலமாக்கியது. அந்தப்படம் தோல்வி அடைந்தாலும், புருவ அசைவு மூலம் கிடைத்த புகழ் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளை கொடுத்து வருகிறது.

ஸ்ரீதேவி பங்களா என்ற பாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை ஒட்டிய நிகழ்வுகளை கொண்ட படம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பாடகியாகவும் அறிமுகமானார். இந்த நிலையில் பிரியா வாரியர், லவ் ஹேக்கர்ஸ் என்ற பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது சைபர் க்ரைம் பற்றிய த்ரில்லர் படம். இதனை மான்யாக் பிரகாஷ் ஸ்ரீவத்தா என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் லக்னோ, டெல்லி, மும்பை பகுதிகளில் நடக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement