Advertisement

போதையில் யாஷிகாவுக்கு லிப்லாக் கொடுக்கும் நண்பர்.. வைரலாகும் வீடியோ

சென்னை: லைவ் சாட்டிங் செய்து கொண்டிருந்த யாஷிகாவுக்கு ஆண் நண்பர் ஒருவர் லிப்லாக் கொடுத்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

தமிழில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்பட சில படங்களில் நடித்திருந்தபோதும், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே இன்னும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, நடிகை ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகாவும் நெருங்கிய தோழிகள் ஆகினர். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போதும் இவர்களது நட்பு இன்றளவும் தொடர்கிறது. தற்போது இருவருமே பிசியாக படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் ஓராண்டு நிறைவடைந்ததை, கடந்த மாதம் இருவரும் சேர்ந்து தனியாகக் கொண்டாடினர். அப்போது அவர்கள் இருவரும் லைவ் சாட்டிங் செய்தனர். இருவருக்குமே சமூகவலைதளங்களில் அதிக நண்பர்கள் இருப்பதால், அந்த சாட்டிங்கில் ரசிகர்கள் அதிகம் பேர் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் மது போதையில் இருப்பது போல் இருக்கிறது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அப்போது அதிரடியாக அந்த வீடியோவிற்குள் இரண்டு ஆண் நண்பர்கள் வருகின்றனர். அவர்களில் ஒருவர் யாஷிகாவிற்கு லிப்லாக் முத்தம் தருகிறார். அதனை ஐஸ்வர்யா சிரித்துக் கொண்டே பார்க்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் மஹத்தைக் காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் யாஷிகா. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னும், தொடர்ந்து மஹத்தை காதலிப்பேன் என்பது போல், கமல் முன்னிலையிலேயே கூறினார். தற்போது அவர்கள் இருவரும் புதுப்படம் ஒன்றில் ஜோடியாக நடித்து வருகின்றனர். விரைவில் மஹத்திற்கு, அவரது காதலி பிராச்சியுடன் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில், யாஷிகாவிற்கு நண்பர் ஒருவர் முத்தமிடுவது போன்று வெளியாகியுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • TechT - Bangalore,இந்தியா

    திருமணத்திற்கு பின்னும் காதலிப்பேன் என்று சொல்வார்...வேறென்ன...

  • mohan - chennai,இந்தியா

    தினமலர் தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை போட வேண்டாம். ... நன்றி...

  • Ganthi - chennai,இந்தியா

    இதற்கு விஜய் டிவி நிர்வாகம் என்ன சப்ப கட்டு கட்ட போகிறது? ஒட்டு மொத்தமாக நம் நாட்டு கலாச்சாரத்தை இந்த டிவி குழி தோண்டி புதைத்து விட்டது?

  • மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    verum liblockthaane athungalukku metera sarva saathaaranam neengal yennadanna liblockirkke ippadi alarureenga pongappa

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    உலக நாயகன், ஆஸ்கார் நாயகன் "ஏற்பாட்டில்" நடைபெறும் பிக் பாஸ் என்னும் கலாசார சீரழிவு நிகழ்ச்சியின் உதவியால் அடுத்த பரிணாமம் இது வாழ்த்துக்கள் உலக நாயகரே வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement