Advertisement

'பிகில்' வெளிநாட்டு உரிமை எவ்வளவு தெரியுமா?

அட்லீ இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'பிகில்' படத்தின் மூன்று போஸ்டர்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. அவை வெளியானதிலிருந்தே விஜய் ரசிகர்களுக்கான படம் இது என வியாபார வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், தயாரிப்பு நிறுவனத்தை இப்போதே அணுகி தங்களுக்கு உரிமை வேண்டும் என பலரும் கேட்டு வருகிறார்களாம்.

முதலில் வெளிநாட்டு உரிமையை முடித்துவிட்டார்கள் என்று கோலிவுட் தகவல். 'பிகில்' படத்தின் வெளிநாட்டு உரிமை 30 கோடிக்கு பேசி முடிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்த உரிமையைப் பெற பலர் போட்டியில் இருந்தார்களாம். கடைசியில் எக்ஸ் ஜென் என்ற நிறுவனமும் யுனைட்டெட் இந்திய எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.

'2.0' படத்திற்குப் பிறகு அதிக விலைக்கு வெளிநாட்டு உரிமைக்கு விற்கப்பட்ட படம் 'பிகில்'தான் என்கிறது சினிமா வட்டாரம். அமெரிக்காவில் இதுவரை வெளிவந்த விஜய் படங்களின் தியேட்டர்களை விட மிக அதிகமான தியேட்டர்களிலும் அது போலவே மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement