Advertisement

ராஜராஜன் பற்றி சர்ச்சை : ரஞ்சித்திற்கு நிபந்தனை முன்ஜாமின்

ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சையாக பேசிய விதத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உள்ளது. தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடந்த பொதுக்கூட்டத்தில் மன்னர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் இயக்குனர் பா.ரஞ்சித். ராஜராஜன் தலித் மக்களின் நிலங்களை பறித்ததாகவும், தேவதாசிகளை உருவாக்கியதாகவும், அவரது காலம் இருண்ட காலம் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக, இயக்குநர் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து முன்ஜாமின் கோரி ரஞ்சித், மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். திருப்பனந்தாள் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ரஞ்சித், மேலும் ஒரு மனு செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஆஜராகி, தமிழக அரசு வெளியிட்ட வரலாறு மற்றும் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே பேசினார். ஜூன் 6ல் நடந்த நிகழ்ச்சிக்கு ஜூன் 11ல் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை அடிப்படையில் தான் மனுதாரர் பேசினார் என்றார்.

இந்த வாதத்தை தொடர்ந்து நீதிபதி கூறியதாவது : பேச்சுரிமை இருந்தாலும், அதற்கு வரம்பு இல்லையா? பிரச்னைக்குரிய வகையில் எதையும் பேசலாமா? ராஜராஜசோழன் குறிப்பிட்ட சமூகத்தினரின் நிலங்களை பறித்துக் கொண்டார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? தமிழக அரசு வெளியிட்டுள்ள பாடப் புத்தகத்தில் பயிர்செய்போர் சொந்தமாக நிலத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும், பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று ராஜராஜன் அறிவிப்பு செய்ததாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது எந்த நோக்கத்தில் அப்படி பேசினார்? அப்போதிருந்த பல நடைமுறைகள், இப்போதும் உள்ளதே? ஏன் இப்படி பேச வேண்டும்? என்றார்.

பின்னர் பா.ரஞ்சித் பேசியது தொடர்பான முழு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை, அரசு தரப்பில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று(ஜூன் 25) வந்தது. அப்போது ரஞ்சித்திற்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கினார் நீதிபதி. மேலும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை இனி ரஞ்சித் பேசக்கூடாது. மீறி பேசினால் ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Mani -

    ivanayellam yenga news potty publicity panreenga?

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

    ஜெய் ஸ்ரீராம்....புரிஞ்சவங்க புருஞ்சுக்கோங்க புரியாதவங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டுக்கோங்க...

  • kb -

    ethukkuda unakku Intha vekkamketta vela

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    இவனுங்களுக்கு கொஞ்சம் துட்டை பார்த்துட்டாங்க என்றாலே போதும், எல்லாம் தெரிந்த மேதைகள் போல மைக்கு கிடைச்ச இடத்தில் எல்லாம் உளறுவனுங்க, பெரிய தலைவனா கூட ஆகிடுவானுங்க. இவனுங்களை சிறிய வயதில் இருந்தே மூளை சலவை செய்து வச்சுருக்காங்க .

  • Sathish - Coimbatore ,இந்தியா

    இது ஒரு நிபந்தனையா? நீதிமன்றம் சொல்லாவிட்டாலும் இனி அவன் பேச மாட்டான். வேற ஏதாவது நிபந்தனை விதித்திருக்கலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement