Advertisement

தர்பார் படத்தில் புதிதாக இணைந்த பாலிவுட் நடிகர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. சுமார் 180 கோடி பட்ஜெட்டில் 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

காமெடியனாக யோகி பாபு நடிக்கும் இந்தப்படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர். இவர்கள் மட்டுமின்றி ஸ்ரீமன் உட்பட பலர் நடித்து வரும் தர்பார் படத்தில் திருநங்கை ஜீவாவும் அண்மையில் இணைந்தார். இவர் 'தர்மதுரை' படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்தவர்.

இவரைத் தொடர்ந்து இப்போது தர்பார் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஹிந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா ('Ekk Deewana Tha') உட்பட பல ஹிந்திப் படங்களில் நடித்தவர்.

பாலிவுட்டில் பிரபலமாக விளங்கி வரும் பிரதீக் பாப்பருக்கு 'தர்பார்' படத்தில் நெக்ட்டீவ் கேரக்டர் என்று தகவல். 'தர்பார்' படம்தான் பிரதீக் பாப்பர் நடிக்கும் முதல் தமிழ்ப்படமாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement