Advertisement

எம்ஜிஆர்., கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் : ஐகோர்ட் அனுமதி மறுப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 23ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. சென்னை அடையாறு எம்ஜிஆர்., - ஜானகி கல்லூரியில் நடக்கும் இந்த தேர்தலில், விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ்சாமிகள் அணியும் மோதுகின்றன. தேர்தல் நடைபெறும் நாளன்று போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தற்போதைய சங்க செயலாளர் விஷால், போலீஸ் கமிஷனரிடத்தில் மனு அளித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு தேர்தல் நடத்த வேண்டாம், வேறு இடத்தில் நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்காததால் பாதுகாப்பு தர இயலாது என்று போலீஸ் கூறிவிட்டனர். நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் விஷால் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூன் 17) வந்தது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது. நடிகர் சங்க தேர்தல் பற்றி கவலையில்லை, பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வேறு இடத்தில் நடத்திக் கொள்ளுங்கள். வேறு இடம் குறித்து நாளை தெரிவிக்கும் படி உத்தரவிட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    பேசாமே மெரினாவில் நடத்திட லாமே அது ரொம்ப ராசியான இடம்,சமாதிகளும் உண்டு, ஜல்லிக்கட்டுக்கு ஜெய்த்ததே

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    அப்படி போடுங்க இவிங்க எதோ மடத்தனமான தேர்தல் நடத்துவாய்ங்களாம். இதற்கு போலீஸ் பாதுகாப்பு.. சேச்சே..தமிழ் சினிமா அழித்துக்கொண்டு இருக்கிறது. விஷால் குழுவுக்கு வாழ்த்துக்கள்.

  • அருண்நம்பி - Chennai,இந்தியா

    சினிமாக்காரனுங்களுக்கு தேவையா குட்டு, நன்றி நீதி அரசரே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement