Advertisement

நடிகர் சங்க தேர்தல் நடக்குமா.?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள மகளிர் கல்லுாரியில் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று நாடக நடிகர்களிடம் ஆதரவு கோரி வருகின்றன. சட்டசபைதேர்தல் அளவுக்கு பணம், பிரியாணி என இரு அணிகளிலும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க நடிகர் சங்க தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அடையாறில் உள்ள மகளிர் கல்லுாரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு போலீஸ் அனுமதி தர மறுத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கும் இன்று(ஜூன் 18) விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் அதே கல்லூரியில் தனது நாடகம் நடத்த அந்த கல்லூரியின் ஒரு வளாகத்தை புக் செய்துள்ளார் நடிகர் எஸ்வி சேகர். தேர்தல் நடக்க உள்ள நிலையில் எஸ்வி சேகரின் நாடகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக திட்டமிட்டப்படி இங்கு தேர்தல் நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • AL.Nachi TN PDK 😊 - ,

    தண்ணி இல்லாம்மை தவுச்சுகிட்டு இருக்காங்க..... உங்களுக்கு ரெம்ப மத்தாலாமா இருக்கு

  • kumzi - trichy,இந்தியா

    தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத.....

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    Entha Nadigar Sanga Theardhal Nadandhal Enna Nadakkavital Enna.The heaven is not going to fall even it takes place or cancell on this specified date.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    ஆனாலும் மக்கள், இந்த தமிழ் நாட்டு மக்கள், திரும்ப திரும்ப இந்த DMK மற்றும் AIADMK இந்த இரண்டு கேடுகெட்ட parties திரும்ப திரும்ப ஆதரிக்கிறார்கள்?? நீங்களே சூடு வைத்துக்கொள்வது. பிறகு சுடுகிறது என்று புலம்புவது.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    நடிகர் சங்கம், நடிகர்களுக்கு உண்டான ரசிகர் சங்கம் எல்லாவற்றையும் முதலில் ban செய்யவேண்டும்.

  • Raj - India,இந்தியா

    நாட்டுக்கு தேவையில்லாத செய்தி...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement