Advertisement

அஜித்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறும் ஜிப்ரான் ?

'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித், வினோத் இயக்கத்தில் 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக அஜித் அவருடைய உடலை ஏற்றி வருகிறாராம். அதற்காக தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்தப் படம் முழு ஆக்ஷன் படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கப் போவதாகச் சொல்கிறார்கள். 'நேர் கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஜிப்ரான் அஜித்தைச் சந்தித்தார். அதன்பின் அஜித் பற்றி டுவிட்டரில் பாராட்டினார். அதன் காரணமாகத்தான் அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது என்கிறார்கள்.

இளம் இசையமைப்பாளர்களுக்கு தன் படங்களில் வாய்ப்பு கொடுக்க அஜித் விரும்புவதாகவும் கூடுதல் தகவல்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement