Advertisement

22 வாரம் கர்ப்பம் : வீடியோ வெளியிட்ட எமி

மதராசப்பட்டினம், ஐ, தாண்டவம், 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். லண்டனில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டவர். குறைந்த காலத்திலேயே, பல படங்களில் நடித்து பிரபலமாக பேசப்பட்டவர்.

இந்நிலையில், அவருக்கு ஜார்ஜ் பனாயிட்டோ என்கிற காதலர். அவரோடு, அவர் தொடர்ந்து டேட்டிங் சென்று வந்தார். ஒரு கட்டத்தில், இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழத் துவங்கினர். இதற்கிடையில், அவர் கர்ப்பமானார். திருமணத்துக்கு முன்னதாகவே, தான் கர்ப்பம் ஆனதை வெளிப்படையாகச் சொன்னார், நடிகை எமி. அதுகுறித்து, பெரும் சர்ச்சைகள் எழுந்து, எமியை கடுமையாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.

சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி எமி, கர்ப்பகாலத்திலும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இப்போது, தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும்; வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கும் அவர், நான் கர்ப்பதரித்து 22 வாரங்கள் ஆகிறது. கர்ப்பஸ்திரியாக இருக்கும் நான், அதை உறுதிபடுத்தும் விதமாக, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். அடுத்தடுத்தும், என்னுடைய கர்ப்ப கால வீடியோ பதிவுகள், தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஸாயிப்ரியா -

    குழந்தை தூங்கும் தொட்டிலை கூட வெளிச்சம் போட வேண்டுமா? அதுவும் இந்த நேரம்.

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இதெல்லாம் என்ன ஜென்மங்களோ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement