Advertisement

மலையாளத்தில் கால்பதித்த பிரசன்னா

துப்பறிவாளன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் பிரசன்னாவிற்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை. இதனால் தனது கவனத்தை வெப் சீரிஸ் பக்கம் திருப்பியுள்ளார். அந்தவகையில் மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளையின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் திரவம் என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ளார் பிரசன்னா.

இந்தநிலையில் தற்போது பிரதர்ஸ் டே என்கிற படத்தின் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார். பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை பிரபல மலையாள காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக கலாபவன் சாஜன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் தமிழில் ரஜினியின் '2.O' படத்தில் அமைச்சராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement