Advertisement

திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன்

மலையாள திரைப்படங்களில் அதிலும் குறிப்பாக ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் திரைப்படங்களில் முக்கிய தூணாக விளங்கி வருகிறார் சண்டை பயிற்சி இயக்குனராக பீட்டர் ஹெய்ன் மாஸ்டர். புலிமுருகன், ஆதி, மதுர ராஜா ஆகிய படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, தற்போது திலீப் நடித்து வரும் ஜாக் டேனியல் என்கிற படத்தில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருகிறார்.

சனல்புரம் ஜெயசூரியா என்பவர் இயக்கிவரும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், திலீப்புக்கு இணையான மிக முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். படத்தில் இவர் இன்னொரு நாயகனா அல்லது வில்லனா என்கிற விஷயம் இப்போதுவரை சஸ்பென்சாகவே வைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில் திலீப், அர்ஜூன் இருவருக்குமே சம அளவிலான முக்கியத்துவம் கொடுத்து சண்டை காட்சிகளை உருவாக்கி வருகிறார் பீட்டர் ஹெய்ன். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் தனது உதவியாளர்களுக்கு சண்டைக்காட்சிகளை படமாக்கும் முன் இவர் ஆலோசனைகள் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement