Advertisement

தள்ளிப்போனது துல்கரின் சோயா பேக்டர் ரிலீஸ்

கடந்த மாதம் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ஒரு எமன்டன் பிரேமகதா என்கிற படம் வெளியாகி, சுமாரான வரவேற்பை பெற்றது. இன்னொரு பக்கம் தமிழில் அவர் நடித்து முடித்த படங்களான வான் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் ரிலீஸ் தேதி எப்போது என்றே தெரியாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் இந்தியில் அவர் நடித்து வந்த சோயா பேக்டர் என்கிற படம் இந்த சம்மரில் வெளியாகும் என நம்பிக்கையுடன் இருந்தார் துல்கர் சல்மான்.

ஆனால், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை வரும் செப்டம்பர் 22க்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அபிஷேக் சர்மா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ராஞ்சனா புகழ் சோனம் கபூர் நடித்துள்ளார். கிரிக்கெட் பின்னணியில் அனுஜா சவுகான் என்பவர் 2008 இல் எழுதிய தி சோயா பேக்டர்' என்கிற நாவலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் கிரிக்கெட் கேப்டனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement