Advertisement

பிரபாஸ் பட போஸ்டரைப் பாராட்டிய அனுஷ்கா

'பாகுபலி' படத்தின் வெற்றிகரமான ஜோடியான பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிக்கிறார்கள் என தெலுங்குத் திரையுலகத்தில் அடிக்கடி கிசுகிசுக்கிறார்கள். அதற்கேற்றாற் போல் இருவரும் அவர்களது பரஸ்பர அன்பைப் பகிர்ந்து கொண்டு அப்படிப்பட்ட பேச்சுகளுக்கு மேலும் வலுவேற்றுகிறார்கள்.

பிரபாஸ் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'சாஹோ' படத்தின் வெளியீட்டுப் போஸ்டர் நேற்று வெளியானது. அந்தப் போஸ்டரைப் பற்றி அனுஷ்கா அவருடைய கருத்தைத் தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் சாஹோ படத்தின் போஸ்டர் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. அடுத்து என்ன என்பது ஒவ்வொரு முறையும் அதன் ஆர்வத்தை தூண்டுகிறது. பிரபாஸ், சுஜித் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்” என பாராட்டியுள்ளார்.

இதனிடையே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான 'சாஹோ' போஸ்டர் 24 மணி நேரத்தில் 7,86,586 லைக்குகளைப் பெற்று தெலுங்குப் பட போஸ்டர்களில் சாதனை புரிந்துள்ளதாம். இப்படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுகிறார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement