Advertisement

திலீப் ரெஸ்டாரண்ட்டில் ரெய்டு

மலையாள நடிகர் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்று ஜாமீனில் வெளிவந்து என கடந்த இரண்டு வருடங்களாக சோதனை மேல் சோதனைகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் கேரளாவில் கோழிக்கோட்டில் அவர் நடத்தி வரும் 'தே புட்டு' என்கிற ரெஸ்டாரண்டில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இன்று(மே 22) காலை 8 மணி அளவில் தே புட்டு ரெஸ்ட்டாரண்ட்டிற்க்கு வந்த உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அங்கு காலாவதியான கோழி இறைச்சி மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவை இருப்பதை கண்டுபிடித்து அவற்றை கைப்பற்றி தீயிட்டு அளித்தனர்.

சோதனை செய்த அதிகாரி கோபகுமார் என்பவர் இதுபற்றி கூறும்போது, கடந்த வருடம் இதே போன்ற சோதனையின்போது மிகவும் சுகாதாரமான முறையில் இருந்த இந்த உணவு விடுதி, இந்த வருடம் மிகவும் மோசமான முறையில் பராமரிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை அளிக்கிறது என்றும், இந்த உணவு விடுதியில் நடிகர் திலீப் ஒரு பங்குதாரர் மட்டுமே மற்றபடி இதை நிர்வகித்து வருபவர் வேறு நபர் என்றும் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement