Advertisement

சீனியர் நடிகர் மீது மீடூ புகார் கூறிய நடிகை ரேவதி

கடந்த வருடம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என அனைத்து திரையுலகங்களையும் மீடூ புகார் சர்ச்சைகள் கலங்கடித்தன. சமீபகாலமாக அவை அமுங்கி இருந்த நிலையில் தற்போது, மலையாள திரையுலகை சேர்ந்த ரேவதி சம்பத் என்கிற நடிகை, பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் பிரிமியர் காட்சிக்காக நடிகர் சித்திக் உடன் அமர்ந்து படம் பார்த்தபோது அவர் தன்னிடம் அத்துமீறி பேசியதுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், 21 வயது பெண்ணான தான் அவரது செயல் குறித்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ரேவதி சம்பத்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சித்திக், நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக பேசுவதற்காக, மலையாள நடிகைகள் ஆரம்பித்த சினிமா பெண்கள் நல அமைப்பை விமர்சித்து பேசினார். இந்த வீடியோவை ஏதேச்சையாக பார்த்த பொழுது எப்படி இந்த மனிதரால் இப்படி பேச முடிகிறது என கோபம் வந்ததாக அந்த வீடியோ உடன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ரேவதி சம்பத்.

ஆனால் இதே ரேவதி கடந்த வருடம் ஒரு இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியபோது, நடிகர் சித்திக் பற்றி எந்த ஒரு இடத்திலும் வாய்திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அப்போதே இதை கூறியிருக்கலாமே என்றும், தற்போது மூன்று வருடங்கள் கழித்து மலிவான பப்ளிசிட்டிக்காக ரேவதி சம்பத் இப்படி செய்கிறார் என்றும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    "நாங்கள் வாய்ப்புக்காவும், வசதிக்காவும் பகிர்ந்து கொள்வோம். பாதுகாப்பான உயரத்துக்கு வந்தவுடன் 'மீ டூ' என்று புகார் செய்வோம்".

  • s t rajan - chennai,இந்தியா

    Misleading title. Please indicate the full name od the artiste in title head.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement