Advertisement

மோகன்லால் இயக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் கே.யு.மோகனன்

நடிகர் பிரித்விராஜை தொடர்ந்து மலையாள நடிகர் மோகன்லாலும் இந்த வருடம் முதன்முதலாக டைரக்ஷனில் இறங்க உள்ளார். பாரோஸ் (borroz) என்கிற போர்ச்சுகீசிய வீரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படம், 3டியில் தயாராகிறது என்பது கூடுதல் சிறப்பு. அதனாலேயே இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்

மலையாள திரையுலகில் இருந்து இந்திக்கு சென்று பிரபலமாகிவிட்ட கே.யு.மோகனன், கடந்த வருடம் பஹத் பாசில் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். தற்போது பிரித்விராஜ் நடிப்பில் தயாராகி வரும் ஆடுஜீவிதம் படத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் இவரது மகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement