Advertisement

மலையாளத்தில் தயாரான ஒரே எம்.ஜி.ஆர் படம்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடித்ததில்லை. வேறு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற ரீமேக் படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்த ஒரே வேற்று மொழிப் படம் ஜெனோவா. இது தமிழ் மற்றும் மலையாளத்தில் தயார் ஆனது. 1953ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.சரோஜா, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதன் மலையாள பதிப்பில் பி.எஸ்.வீரப்பா நடித்த வில்லன் கேரக்டரில் மலையாள வில்லன் நடிகர் ஆலப்பி வின்செண்ட் நடித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன், ஞானமணி, கல்யாணம் இசை அமைத்திருந்தனர். விட்டல்ராவ் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.
முதலில் மலையாளத்திலும் 2 மாதங்களுக்கு பிறகு தமிழிலும் வெளிவந்தது. இதன் மலையாள பதிப்பில் எம்.ஜி.ஆருக்கு பதில் வேறொருவர் டப்பிங் பேசினார். எம்.ஜி.ஆருக்கு சரியாக மலையாளம் பேச வரவில்லை என்று அதன் தயாரிப்பாளர் அப்படிச் செய்தார். இதை எதிர்த்து எம்.ஜி.ஆர் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றார். மலையாளம் எம்.ஜி.ஆரின் தாய்மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement