Advertisement

கேமராமேன் யு.கே.செந்தில்குமார் எனக்கு சிபாரிசு செய்தார்: சாக்ஷி அகர்வால்

சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால், காலா படத்திற்கு பிறகு பிசியாகிவிட்டார். தற்போது அவர் கையில் நான்கைந்து படங்கள் இருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய்லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் எனக்கு மைல் கல்லாக அமையும். எழில் சார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் உடன் நடித்து வரும் ஹாரர் கலந்த காமெடி படமும் எனக்கு வேறோர் தளத்தை அமைத்துத் தரும்.
நான் அடிப்படையில் தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதால் எழில் சார் படத்தின் ஆடிஷனில் கேமராமேன் யூ.கே செந்தில் குமார் என்னை "இவர் தான் நம் படத்திற்குச் சரியாக இருப்பார்" என்று அழுத்தமாகச் சொன்னார். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரோடு வேலை செய்வது ஆகப்பெரும் சந்தோஷம்.
அதேபோல் ஜீவி பிரகாஷ் போல ஒரு ஸ்வீட் மனிதரைப் பார்க்கவே முடியாது. படத்தில் நமக்கான இடத்தை அதிகப்படுத்தி அழகு பார்ப்பார். அவரோடு நடிக்கும் எல்லா நடிகைகளுக்கும் மீண்டும் அவரோடு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இயக்குநர் அணீஸ் சாரின் திருமணம் எனும் நிக்காஹ் படம் யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத அழகியல் சினிமா. அவரின் அடுத்தப்படத்தில் நான் ஹீரோயினாக இருப்பது மகிழ்ச்சி. உணர்வுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தரும் படங்களுக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ்சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும். என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement