Advertisement

வயதான தாய், தந்தையை புறக்கணிக்கும் நாசர்: தம்பிகள் புகார்

பிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் தம்பிகள் ஜவஹர், ஆசிப் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:
எங்கள் குடுத்தில் 4 சகோதரர்கள், அதில் நாசர்தான் மூத்தவர். அவர் நடிகராக வேண்டும் என்று எங்கள் தந்தை அவரை 10 வயதிலிருந்து நடிக்க வைத்தார். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து படிக்க வைத்தார். ஆனால் நாசர் அதையெல்லாம் மறந்து விட்டார். 80 வயதை தாண்டிவிட்ட பெற்றோர்கள், தங்களின் கடைசி காலத்தில் இருக்கிறார்கள். நாசர் எங்களுக்கு பண உதவி எதுவும் செய்ய வேண்டாம். அடிக்கடி வந்து அம்மா, அப்பாவை பார்த்து ஆறுதல் வார்த்தை சொன்னால் போதும்.
நாசர் கோடி கோடியாக சம்பாதித்தாலும் நாங்கள் கஷ்டத்தில்தான் இருக்கிறோம். இதுவரை அவர் எங்களுக்கு எதுவும் செய்ததில்லை. அவரது மகன்களை கூட எங்களுக்கு அவர் அறிமுகப்படுத்தியதில்லை. அத்தனைக்கும் காரணம் கமீலா நாசர்தான். ஆஸ்பத்திரியில் ரிசப்சனிஸ்டாக வேலை பார்த்த கமீலாவை நாசர் காதலித்து திருமணம் செய்தார். அதன் பிறகு அவர் தன் மனைவி குடும்பத்தின் பக்கமே சாய்ந்து விட்டார். அண்ணன் சம்பாதித்த சொத்து, பணம் அனைத்தும் கமீலாவிடமே உள்ளது. அண்ணன் நாசர் நல்லவர்தான். ஆனால் அண்ணி கமீலா அவரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு எங்களை புறக்கணிக்க வைக்கிறார்.நாசர் தன் பெற்றோரை கவனிக்காவிட்டால் நடிகர் சங்கத்தில் புகார் தருவோம், நடிகர் சங்கம் முன் உண்ணாவிரதம் இருப்போம். அதிலிலும் தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை நாடுவோம். என்றார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ganapathy - khartoum,சூடான்

    தேர்தல் முடிந்து விட்டது. நாசர் பதில் சொல்ல வேண்டும். தாயின் பாதத்தில் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் இருக்கிறது என்றார் நபிகள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement