Advertisement

கேரளாவிலும் எதிர்பார்ப்பு!

சூர்யா நடித்த, தானா சேர்ந்த கூட்டம் தோல்வி அடைந்ததால், அடுத்தடுத்த படங்களின் கதைகளை தேர்வு செய்வதற்கு ரொம்பவே மெனக்கெட்டார். மீண்டும் சறுக்கி விடக் கூடாது என்பதற்காக, பொறுமையாக காத்திருந்தார். தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின், அவர் நடித்துள்ள, என்.ஜி.கே., என அழைக்கப்படும், நேர்கொண்ட பார்வை படம், திரைக்கு வருகிறது. இதில், அவருக்கு ஜோடியாக, சாய் பல்லவியும், ரகுல் ப்ரீத்சிங்கும் நடித்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்துக்கு, கேரளாவிலும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சாய் பல்லவி, கேரளாவில், ஏற்கனவே பிரபலமானவர். மேலும், சூர்யாவுக்கு, கேரளாவில் பெண் ரசிகையர் அதிகம் உள்ளனர். இதனால், கேரளாவில், அதிக தியேட்டர்களில் இந்த படம் வெளியாகவுள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement