Advertisement

மீண்டும் போலீசாகும் சிம்பு.?

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்த விட்டு ஸ்லிம்மாக வந்திறங்கியிருக்கிறார் சிம்பு. அடுத்தப்படியாக வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இதை முடித்ததும் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் ஹரி உடன் இணைந்து ஒரு படம் பண்ண உள்ளார் சிம்பு. ஏற்கனவே கோவில் படத்தில் இணைந்த இவர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளனர்.

சூர்யா, விக்ரம் என்று மாறி மாறி போலீஸ் கதைகளை படமாக்கி விட்ட ஹரி, சிம்புவின் இந்த ஸ்லிம் கெட்டப்பை பார்த்த பிறகு அடுத்தபடியாக சிம்புவை வைத்தும் ஒரு போலீஸ் கதையைத்தான் படமாக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பு ஏற்கனவே தபாங் ஹிந்தி படத்தின் தமிழ் ரீ-மேக்கான ஒஸ்தியில் போலீஸாக நடித்திருந்தார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement