Advertisement

சைராவில் அனுஷ்காவின் கேரக்டர் என்ன.?

Share

உடல் எடை அதிகரித்ததால் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த அனுஷ்கா, ஸ்லிம்மான பிறகு நடிக்கும் படம் சைலன்ஸ். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார். இந்தியாவில் பிரிட்டீஷ் ஆதிக்கம் இருந்த வந்த காலகட்டத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் அனுஷ்காவையும் ஒரு வேடத்தில் நடிக்க கேட்டனர். அவருக்கு கதையில் பெரிய வேடம் இல்லை என்றாலும், இந்த சைரா நரசிம்ம ரெட்டி கதையை அனுஷ்காவின் கேரக்டர் சொல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளதாம். அந்தவகையில், சுத்ரத்தார் என்றொரு கேரக்டரில் அனுஷ்கா நடித்துள்ளதாகவும், படத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் அவர் வருவதாகவும் கூறப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement