Advertisement

'சைலன்ஸ்' படப்பிடிப்பு, அமெரிக்கா பறக்கும் அனுஷ்கா

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்க ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகப் போகும் படம் 'சைலன்ஸ்'. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில்தான் நடைபெற உள்ளது. அதற்காக படக்குழுவினர் பிப்ரவரி மாதமே அமெரிக்காவிற்கு சென்றிருக்க வேண்டியது. ஆனால், அனுஷ்காவுக்கு விசா கிடைக்க தாமதமானாதால் உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை. தற்போது அனுஷ்காவுக்கு விசா கிடைத்துவிட்டதாம். அதனால், படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா கிளம்ப உள்ளனர்.

மாதவன் நடித்த 'ரெண்டு' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இதனிடையே, ஆர்ஆர்ஆர் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக வந்த தகவல் உண்மையில்லை எனத் தெரிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement