Advertisement

தாதாவாகிறார் ஸ்ருதிஹாசன்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் 3 படத்தில் நடித்தார் நடிகை ஸ்ருதிஹாசன். அதன்பின் அவர் படங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தவில்லை. பாட்டுப்பாடி, நடனமாடி ஆல்பம் தயாரித்து வெளியிடுவதிலேயே கவனம் செலுத்தி வந்தார்.

ஒருசில டி.வி., நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி வந்தார். தற்போது எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் ஒரு ஹிந்தி படத்தில் தாதாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பவர் என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தில், இவரோடு வித்யூத் ஜம்வால் என்பவர் நடிக்கிறார். அவரும் படத்தில் தாதாவாகத்தான் நடிக்கிறார்.

படு ஆக்ஷன், த்ரில்லராக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை மகேஷ் மஞ்சிரேக்கர் என்பவர் இயக்குகிறார். நிழல் உலக தாதாக்களின் கதையை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை வரும் ஜூலை 12ல் வெளியிட படக் குழு திட்டமிட்டிருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement