Advertisement

சாந்தனு கனவை நிறைவேற்றுவாரா விக்ரம் சுகுமாறன்?

மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் விக்ரம் சுகுமாறன். இந்தப் படத்தின் மூலம்தான் கதிர் ஹீரோவாக அறிமுகம் ஆனார். வேல ராமமூர்த்தி வில்லனாக அறிமுகம் ஆனார். ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பாளராக அறிமுகமானார். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் படம் வசூலில் வெற்றி பெறவில்லை.

இதனால் இயக்குனர் விக்ரம் சுகுமாறனுக்கு அடுத்த படம் கிடைப்பதில் காலதாமதம் ஆனது. தற்போது சாந்தனு ஹீரோவாக நடிக்க ஒரு படம் இயக்க இருக்கிறார். சாந்தனு தவிர மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வர இருக்கிறது.

பலமான சினிமா பின்னணி இருந்தும் சாந்தனுக்கு ஒரு வெற்றி சாத்தியப்படவே இல்லை. இத்தனைக்கும் அவர் திறமையான நடிகர்தான். சக்கரகட்டி படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தாலும் சித்து பிளஸ் 2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம் படங்கள் அவரை தூக்கி நிறுத்த தவறி விட்டன. வெற்றியை தவறவிட்ட விக்ரம் சுகுமாறன், சாந்தனுவின் வெற்றி கனவை நிறைவேற்றுவாரா என்பதை காதல்தான் தீர்மானிக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

    வளரும் நடிகருக்கு வெற்றி அவசியம் கமெர்ஷியல் ஹீரோ என பொதுவாக இல்லாமல் அதையும் தாண்டி சினிமாவில் அவர் யாரை மகிழ்விக்கப்போகிறார் என்னும் தெளிவு, தான் எந்த மாதிரியான brand? தன்னை விற்கும் தயாரிப்பாளருக்கு தான் யார்? காமெடி ஹீரோவா, ஆக்ஷன் ஹீரோவா, பெண்களை மயக்கும் சாக்லேட் பாய், குணச்சித்திர நடிகரா? பன்முகம் காட்டும் பன்முக நடிகர்? தன்னை முதலில் அடையாளப்படுத்தவேண்டும்...இவர் படத்துக்கு போகலாம் என மக்கள் நினைக்க வேண்டும்..பலவீனம் எளிதில் கண்ணுக்கு தெரியும், பலம் நம் கண்ணுக்கு தெரியாது...இன்று பலபேர் தோத்துபோவதற்கு இதுதான் காரணம்..இதுனுடன் அவரின் கதை தேர்வும் ஒரு காரணம்.. சுப்ரமணியபுரம், களவாணி முதில் இவர்தான் நடிக்க வேண்டியது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement