Advertisement

தெருக்கூத்து நடத்தும் சினிமா இயக்குனர்

சத்யராஜ் நடித்த வெங்காயம் படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். இந்தப் படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். ஆரம்பத்தில் யாரும் கண்டுகொள்ளாத இந்தப் படத்தை இயக்குன் சேரன் பார்த்துவிட்டு அதனை தன் பெயரில் மறு வெளியீடு செய்தார். பரவலான பாராட்டுகளை பெற்றது.

தற்போது ராஜ்குமார் ஒண் என்ற படத்தை கின்னஸ் சாதனைக்காக உருவாக்கி வருகிறார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் என எல்லாவற்றையும் தனி ஒரு ஆளாக உருவாக்கி வருகிறார். அதாவது ஒருவரால் மட்டும் உருவான படம் என்ற சாதனைக்காக.

இதற்கிடையில் ராஜ்குமார் தெருக்கூத்தை நவீனமாக்கி நடத்தி வருகிறார். அவரது வெங்காயம் படத்திலும் தெருக்கூத்து முக்கிய இடம் பிடித்திருந்தது. தமிழுக்காக உயிர்நீத்த நந்தி வர்மனின் வாழ்க்கையை தெருக்கூத்தாக நடத்தி வருகிறார். இதில் நந்திவர்மனாக அவரே நடிக்கிறார். இந்த தெருக்கூத்து கம்போடியா நாட்டில் உள்ள அங்கோவார்ட் கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தற்போது வருகிற 28ந் தேதி சென்னை தி.நகர் தியாராயகர் ஹாலில் இரண்டு காட்சிகளாக நடக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement