Advertisement

ஷில்பா 2 வேடங்களில் நடித்த பேரழகி

காளி படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாகவும், இஸ்பேட் ராஜா இதய ராணி படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாகவும் நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். இந்த இரண்டு படங்களுக்கும் முன்பே அவர் நடித்த படம் பேரழகி ஐ.எஸ்.ஓ. அதாவது அவர் தமிழில் அறிமுகமான படம். இது ஒரு சிறு பட்ஜெட் படம். எடிட்டர் லெனின் உதவியாளர் விஜயன் இயக்கி உள்ளார்.

ஷில்பா மஞ்சுநாத் ஜோடியாக நீ என்ன மாயம் செய்தாய், மித்ரா படங்களில் நடித்த விவேக் நடிக்கிறார். இவர்கள் தவிர பழம்பெரும் நடிகை சச்சு, சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், சார்லஸ் தனா இசை அமைத்துள்ளார். இதில் ஷில்பா மஞ்சுநாத் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் விஜயன் கூறியதாவது:

பேரழகி ஐ.எஸ்.ஓ, ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். ஷில்பா தான் அந்த ரோலை செய்துள்ளார். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களை, காமெடியாக கூறியுள்ளோம். ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக பேரழகி ஐ.எஸ்.ஓ இருக்கும்.

ஷில்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மொத்தம் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். விஜிபியில் அரண்மனை செட்டு போட்டு சில காட்சிகளை படமாக்கினோம். அது விஜிபி என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்துள்ளோம். குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை எடுத்துள்ளோம். மே-10 முதல் இந்த திரைப்படம் வெளியாகிறது என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement