Advertisement

ஹிந்தியில் உருவாகப் போகும் சூப்பர் டீலக்ஸ்!

சில வாரங்களுக்கு முன் ரிலீசான படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, திருநங்கையாக நடித்திருந்தார். இந்தப்படத்திற்கு ஆதரித்தும், எதிர்த்தும் கலவையான விமர்சனங்கள் வந்தன. விஜய் சேதுபதியுடன், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, பகத் பாசில், பகவதி பெருமாள் மற்றும் காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். படம் சிறப்பாக வந்திருப்பதைத் தொடர்ந்து, படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தப் படத்தைப் பார்த்த ஹிந்தி பிரபலங்களான அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்ய மொத்வானி ஆகியோருடன் பலரும் படம் குறித்து பெருமையாக பேசத் துவங்கி உள்ளனர். படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை வெகுவாக பாராடி இருக்கும் அவர்கள், படத்தை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டால், மிகப் பெரிய வெற்றியடையும் என கூறியுள்ளனர்.

இதையடுத்து, படத்தை ஹிந்தியில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் குமாரராஜா. இதற்காக பிரபலமான ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் குமாரராஜா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஹிந்தி படத்தில், தமிழில் நடித்தவர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் இயக்குநர் தரப்பு கூறுவதால், சூப்பர் டீலக்ஸ் தமிழ் படத்தில் நடித்தவர்கள் சந்தோஷமாக உள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • bal - chennai,இந்தியா

    ஏன்டா...தமிழிலேயே சகிக்கலே அப்படின்னா ஹிந்தில வேறயா...என்ன ஆச்சு உங்களுக்கு.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    படத்தில் மேட்டரில்லையாம் மேட்டரில்தான் படமே போட்டான் போட்டேன் போடுவேன் . மேட்டர் பண்ணிட்டோம் என்பதையெல்லாம் சென்சாரில் அப்படியே விட்டுட்டாங்க. 90mlலும் இதுவும் சென்சாரின் உறக்கம் .இதையே ஹிந்தியிலும் ? கருமம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement