Advertisement

ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ரஜினி பாராட்டு

ஒய்.ஜி.மகேந்திரனின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடக குழுவின் 67வது நாடகம் 3ஜி. இதனை அவர் தற்போது உலகம் முழுவதும் நடத்தி வருகிறார். இந்த நாடகத்தை பாராட்டி ரஜினி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

ஒய்.ஜி.மகேந்திரனின் எல்லா நாடகங்களையும் நான் பார்த்து விடுவேன். சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கிற நாடகமாக அவைகள் இருக்கும். சமீபத்தில்தான் அவரது 3ஜி நாடகம் பார்த்தேன். ஏதோ காமெடியாக 3ஜி, 4ஜி அப்படி ஏதோ சொல்லப்போகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் சர்ப்ரைசாக பல விஷயங்கள் அதில் இருந்தது. மகாத்மா காந்தியையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசையும் மேடைக்கு கொண்டு வந்து நிறுத்தியது அற்புதமாக இருந்தது. அருமையான கருத்துக்கள் கொண்டதாக இருந்தது. அவருக்கு நாடக உலகமே வாழ்த்து சொல்லணும், மக்கள் ஆதரவு தரணும்.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Raman Ganesan - Madurai,இந்தியா

    boochi marunthu banama நல்ல விஷயம் பாராட்டுவதற்கு மனசு இருந்தா போதும் எல்லாத்துக்கும் banama இருந்து அழுதா வாழ்கை முழுவதும் அழுகை வேண்டி தான்

  • rama - doha,கத்தார்

    அவர் ஏன் பாராட்டுகிறார் என்று மக்களுக்கு தெரியும். நீர் ஏன் அதை தவறாமல் பிரசுருக்கிறாய் என்றும் மக்களுக்கு தெரியும்.

    • சௌக்கிதார் வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

      ஐயோ ராமா என்ன ஏன் இந்த மாதிரி பசங்களுக்கு எல்லாம் கருத்து போட வைக்கிற??

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    இருவரும் சகலைகள் தான் . அக்கா தங்கையை திருமணம் செய்தவர்கள்

  • INNER VOICE - MUMBAI,இந்தியா

    YG Mahran is a very good actor. His acting could be assessed by Paritchaikku neramatchu, K.Baachandar drama. and many more. Unfortunately in many movies, in the name of comedy he acting was misused by double meaning dialogues and ugly movements.Glad to note that again he is shining exposing his real talent

  • Ponniyin Selvan - Thanjavur,இந்தியா

    நல்ல விஷயங்களை மனம் திறந்து பாராட்டுவது ரஜினியிடம் இருக்கும் ஒரு முக்கிய நற்பண்பு.

  • ஸாயிப்ரியா -

    அரசியல் பற்றி அறிய சோ அவர்களின் நாடகம் மட்டுமே பார்ப்பேன். பரிட்சைக்கு நேரமாச்சு பார்த்தது முதல் மகேந்திரன் சார் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனித்தன்மையுடன் இருப்பது நாடகத்துறை இன்றும் உயிரோட்டமாக திகழ்கிறது. பாராட்டுக்கள்.

  • மதுவந்தி -

    YGM ற்கு நிகர் அவர் மட்டுமே. வசனங்கள் கலகலப்பாக இருக்கும் .எதையும் எதார்த்தமாக சொல்வதால் அரசியல் கலந்தாலும் கைகலப்பாக மாறாது. Great.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement