Advertisement

பல கோடி வீடு வாங்கிய இசை நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் பெயரை தன் பெயரின் முதல் பெயராகக் கொண்ட இசையமைப்பாளர், தயாரிப்பார் மற்றும் நடிகர் அவர். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து அதில் படங்களைத் தயாரித்து வந்தார். ஆனால், கடைசியாக வெளிவந்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடவில்லை. அதனால், பெரும் நஷ்டத்திற்கு ஆளானார் என்று செய்திகள் வெளிவந்தன. இருந்தாலும் நாயகனாக நடிக்க அவர் கைவசம் நான்கைந்து படங்கள் உள்ளன.

சமீபத்தில் சென்னையின் மையப் பகுதியில் 'கேட்டட் கம்யுனிட்டி' வகை வீட்டு வளாகம் ஒன்றில் சில பல கோடிகளைக் கொடுத்து பெரிய வீடு ஒன்றை வாங்கியிருக்கிறாராம். சில கோடி நஷ்டம் என்றாரே அப்புறம் எப்படி இவ்வளவு தொகை கொடுத்து வீடு வாங்கியுள்ளார் என திரையுலகத்தில் விவரம் தெரியாத சிலர் ஆச்சரியமாகப் பார்க்கிறார்களாம்.

தற்போது நடித்து வரும் படங்களுக்காக படம் ஒன்றிற்கு சுமார் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல். எந்தத் தொந்தரவும் தராத, தயாரிப்பாளர்களின் கஷ்டம் அறிந்த நடிகராக இருப்பதால் அவரை வைத்துப் படமெடுத்தால் சிக்கல் இல்லை என முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் அவருக்காக சர்டிபிகேட் தருவதால் மேலும் சில புதுப்பட வாய்ப்புகளும் அவரைத் தேடிப் போகிறதாம். அப்படியென்றால் 'இசை நடிகர்' ஒரு வீடு என்ன மேலும் சில வீடுகளை தாரளமாக வாங்கலாம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    தாய் தந்தை இல்லாமல் வளர்ந்த ஒருவர் . வெற்றி பெறட்டும் விடுங்கள் .

  • Vasudevan Srinivasan - Chennai,இந்தியா

    விஜய் ஆண்டனி அவர்களின் முன்னேற்றம் பாராட்டப்படவேண்டிய ஒன்று..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement