Advertisement

ஷங்கர் 25 கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். கும்பகோணத்தில் பிறந்து நடிகராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கண்ணில் பட்டு, அவரிடம் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அர்ஜூன் நடித்த ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அதன்பின்னர் காதலன், இந்தியன், முதல்வன், சிவாஜி போன்ற பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்து வியக்க வைத்தார். ஷங்கரின் கற்பனை திறன் அளப்பரியது. ஹாலிவுட் இயக்குநர்களுக்கு நிகராக யோசிக்க கூடியவர். அதற்கு அவர் இயக்கிய எந்திரன், 2.0 படங்கள் சாட்சி.

ஷங்கர் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லீ போன்றவர்கள் கடந்தாண்டு கொண்டாடினர். இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் அலுவலகத்தில் இன்று(ஏப்.,21), ஷங்கர் 25 ஆண்டு திரையுலக பயணத்தின் கொண்டாட்டம் நடந்தது.

இதில் இயக்குநர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், வசந்தபாலன், லிங்குசாமி, சசி, பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், அட்லீ, பாண்டிராஜ், மோகன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement