Advertisement

அமோக முன்பதிவில் 'அவெஞ்சர்ஸ் - எண்ட்கேம்'

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு ஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்திற்குக் கிடைத்து வருகிறது. வரும் ஏப்ரல் 26ம் தேதியன்று இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது.

அதற்கான முன்பதிவு இன்று(ஏப்.,21) ஆரம்பமானது. முன்பதிவு ஆரம்பமான சில மணி நேரங்களுக்குள்ளாகவே படம் வெளியாகும் நாளான ஏப்ரல் 26ம் தேதியன்று அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அதற்கடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் 90 சதவீத டிக்கெட்டுக்கள் முன்பதிவு ஆகியுள்ளன.

இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் பெரிய வசூலைப் பெற்ற படங்கள் எனக் கொண்டாடப்பட்ட 'பேட்ட, விஸ்வாசம்' படங்களுக்குக் கூட இப்படி ஒரு முன்பதிவு நடைபெறவில்லை. 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தைப் பார்க்க தமிழ் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அதனால்தான், சில தமிழ்ப் படங்களின் வெளியீட்டையே அதற்கடுத்த வாரங்களுக்குத் தள்ளி வைத்துவிட்டார்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement